/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச வர்த்தக கண்காட்சி; அமைச்சருக்கு அழைப்பு
/
சர்வதேச வர்த்தக கண்காட்சி; அமைச்சருக்கு அழைப்பு
ADDED : டிச 28, 2024 05:53 AM

புதுச்சேரி; பெங்களூருவில் நடக்கும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு சார்பில், ஆர்கானிக் மற்றும் சிறுதானியங்கள் தொடர்பான சர்வதேச வர்த்தக கண்காட்சி வரும் ஜன., 23ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
பெங்களூரு, அரண்மனை மைதானம், திரிபுரவாசினியில் நடக்கும் கண்காட்சியில் ஆர்கானிக் மற்றும் சிறுதானியங்கள் சம்மந்தமான வாய்ப்புகள், ஏற்றுமதி, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சந்தை வலுப்படுத்துதல், நுகர்வோர் விழிப்புணர்வு உள்ளிட்ட அரங்கங்கள் அமைக்கப்படயுள்ளது.
இதையொட்டி, கர்நாடக மாநில விவசாய துறை இணை இயக்குனர்கள் லதா, சுஜாதா ஆகியோர் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை சந்தித்து, அழைப்பு விடுத்தனர்.
புதுச்சேரி மாநிலத்தின் சார்பாக சிறுதானியங்கள் தொடர்பான அரங்கம் அமைக்கவும் கேட்டுக் கொண்டனர்.

