/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணுக்கு மிரட்டல்: 5 பேருக்கு வலை
/
பெண்ணுக்கு மிரட்டல்: 5 பேருக்கு வலை
ADDED : மார் 19, 2024 10:55 PM
புதுச்சேரி: வீட்டு பொருட்களை சேதப்படுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளம், குண்டுசாலையை சேர்ந்தவர் ராதிகா, 42. இவரது கணவர் கிருஷ்ணன் இறந்து விட்டார். தனது தாய் வீட்டில் வசித்து வரும் ராதிகாவுக்கு மூலக்குளம் அருகே சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை சிவக்குமார் என்பவருக்கு பழக்கடை வைப்பதற்கு வாடகை விட்டுள்ளார்.
சிவக்குமாருக்கு பணம் கொடுத்து ராதிகா உதவி செய்து வந்தார். பணம் கொடுப்பதை அவர் நிறுத்தியதால், ஆத்திரமடைந்த, சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் நேற்று ராதிகா வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர்.
ராதிகா புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சிவக்குமார் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

