UPDATED : அக் 31, 2026 08:29 PM
ADDED : அக் 31, 2026 08:24 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் இறந்தவர் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், 48, வயது மதிக்கதக்கவர் கடந்த 22ம் தேதி மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், சிகிச்சை பலனின்றி 29ம் தேதி இறந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து,
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.
