ADDED : அக் 31, 2026 07:56 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூ., கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இ.கம்யூ., மா.கம்யூ., கம்யூ., (எம்.எல்) ஆகிய கட்சிகள் சார்பில், விலைவாசி உயர்வை கண்டித்து, புதுச்சேரி அண்ணா சிலை அருகில் இன்று (அக்.,31) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இலவச அரிசியை வழங்க வேண்டும். ரேஷன் கடையில் சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை மலிவு விலைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
