/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கல்
/
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கல்
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கல்
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கல்
ADDED : மே 27, 2025 07:16 AM

புதுச்சேரி: திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா மற்றும் பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழை முதல்வர் ரங்கசாமியிடம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.
வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது.
வரும், 29ம் தேதி ரத உற்சவமும், 30ம் தேதி விநாயகர் உற்சவமும் நடக்கிறது. 3ம் தேதி சுவாமி பாரிவேட்டை நிகழ்ச்சியும், 7ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக வரும் 8 ம் தேதி காலை 7:40 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.
தேர் திருவிழாவில், முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, முதல்வர் ரங்கசாமியிடம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி திருக்காமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
தொடர்ந்து, வரும் 6 ம் தேதி நடக்கும் ஒதியம்பட்டு, விநாயகர், முத்து மாரியம்மன், பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகத்திற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டது.
இதில், தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குமார், ஒதியம்பட்டு கோவில் நிர்வாக அதிகாரி பற்குணன், நிர்வாகிகள் குலசேகரன், மாரிமுத்து, திருவேங்கடம், பாலு, தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.