/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அயோடின் குறைபாடு தடுப்பு தின விழிப்புணர்வு
/
அயோடின் குறைபாடு தடுப்பு தின விழிப்புணர்வு
ADDED : டிச 11, 2025 05:32 AM

புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் குறைபாடு தடுப்பு தின விழிப்புணர்வுநிகழ்ச்சி நடந்தது.
விரிவுரையாளர் வேல்முருகன் வரவேற்றார். துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார்.சுகாதார ஆய்வாளர் மதிவதனன் முன்னிலை வகித்தார்.ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், 'அயோடின் குறைபாடு உடலின் உயரம் மற்றும் பருமனை நிர்ணிக்கிறது. குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் அயோடின் பெரும் பங்கு வகிக்கிறது. ஆகையால், அயோடின் சத்து நிறைந்த முட்டை, பால், மீன், சீஸ், சோளம், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அயோடின் கலந்த உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் இருப்பதை கண்டறியும் பரிசோதனை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார்,மரிய ஜோசப், கலையரசி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். விரிவுரையாளர் தேவி பாலா நன்றி கூறினார்.

