/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையின் நடுவே இரும்பு பேரல் அமைப்பு
/
சாலையின் நடுவே இரும்பு பேரல் அமைப்பு
ADDED : அக் 09, 2025 02:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் விபத்துகளை தடுக்க சாலையின் நடுவே பாண்டி ஓசன் பார்க் நிர்வாகம், போக்குவரத்து போலீஸ் சார்பில், இரும்புபேரல் தடுப்புகள், பேரிகார்டு அமைக்கப்பட்டன.
புதுச்சேரி - கடலுார் சாலையில் அதிவேகமாக இயக்கப்படும்கனரக வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, நோணாங்குப்பம், இடையார்பாளையம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் பகுதிகளில் அதிகமானவிபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, பாண்டி ஓசன் பார்க் நிர்வாகம், தெற்குபோக்குவரத்து போலீஸ் சார்பில், சாலையின் நடுவே இரும்பு பேரல் தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம் முன்னிலையில், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். இரும்பு பேரல் அமைப்பதற்கான ஏற்பாடுகளை பாண்டி ஓசன் பார்க் நிர்வாக இயக்குநர் அன்பு செய்திருந்தார்.