புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு : நாளை மறுதினம் துவங்குகிறது
புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு : நாளை மறுதினம் துவங்குகிறது
UPDATED : நவ 16, 2026 06:46 PM
ADDED : நவ 16, 2026 06:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்புகள் நாளை மறுதினம் (18ம் தேதி) துவங்கி 7 நாட்கள் நடக்கிறது
புதுச்சேரி, மூலக்குளம், எம்.ஜி.ஆர்., நகர், ஈஷா யோகா மையத்தில் (நாளை மறுதினம் 18ம் தேதி) ஈஷா யோகா வகுப்பு துவங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் யோகா வகுப்பு, தினசரி காலை 6:00 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் 8.30 மணி வரை நடக்கிறது.
இந்த வகுப்பில் ஷாம்பவி மஹாமுத்ரா என்ற சக்தி வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, கழுத்து முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக் கவலை, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது,
பயிற்சி வகுப்பில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432 77486, 9443275040, ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
