/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் பெற ஆணை வழங்கல்
/
சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் பெற ஆணை வழங்கல்
சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் பெற ஆணை வழங்கல்
சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் பெற ஆணை வழங்கல்
ADDED : நவ 16, 2025 03:32 AM

புதுச்சேரி: பாங்க் ஆப் பரோடா புதுச்சேரி மண்டலம் சார்பில், விழுப்புரம் பகுதி விவசாயிகளுக்கு காசோலை மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல துணை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் வேளாண்துறை இணை இயக்குனர் சீனிவசான், புதுச்சேரி மண்டல மேலாளர் பிரவீன் குமார் ராகுல், விழுப்புரம் வேளாண் சந்தை துணை இயக்குனர் சுமதி, மகாலட்சுமி குழுமம் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் விழுப்புரம், கடலுார் மாவட்ட கிளைகளின் விவசாயிகள் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ. 4.90 கோடி கடன் அனுமதிக்கான ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து வேளாண் தொழில் முனைவோர் மற்றும் டிராக்டர் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.