/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கல்
/
விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கல்
ADDED : நவ 28, 2025 04:46 AM

புதுச்சேரி: விவசாயிகளுக்கான, ஸ்மார்ட் அடையாள அட்டையை, வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மாநில வங்கியாளர்கள் கூட்டம், புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) 9.5 லட்சம் ரூபாய் நிதியுதவி மூலம் விவசாயிகளுக்கு, ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்று, விவசாயிகளுக்கு, ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிதிச் செயலாளர் கிருஷ்ண மோகன் உப்பு, வேளாண் துறை செயலாளர் யாசின் முகம்மது சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி இயக்குனர் பஜ்ரங் சிங், நபார்டு வங்கியின் பொது மேலாளர் ஹரி கிருஷ்ணராஜ், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ராஜ்குமார், நபார்டு வங்கி, புதுச்சேரி மாவட்ட அபிவிருத்தி மேலாளர் சித்தார்த்தன் உட்பட வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

