/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்
/
தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்
தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்
தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி பதவிக்கான பணி ஆணை வழங்கல்
ADDED : மே 30, 2025 04:39 AM

புதுச்சேரி; தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி பதவிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியகாக உள்ள நிலைய அதிகாரிகளுக்கான, 3 ஆண், 2 பெண் என மொத்தம் 5 பேருக்கு நேரடித்தேர்வு, ஆட்சேர்ப்பு மூலமாக நிரப்ப எடுக்கப்பட்ட உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளது.இந்நிலையில்,புதுச்சேரியில் முதன் முறையாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்றுள்ள 4 நிலைய அதிகாரிகள் பணிகளுக்கான பணி ஆணையை, முதல்வர் ரங்காமி நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், கோட்ட தீயணைப்பு, அதிகாரி, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.