
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் வழங்கினார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளர்களாக பணிபுரிந்த பாலாஜி வெங்டேஸ்வரராவ், விக்டோரியா, சுந்தரி, ராஜ்குமார் ஆகியோர் செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

