தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மன அழுத்த ஆலோசனை பெற கட்டணமில்லா எண் வெளியீடு

மன அழுத்த ஆலோசனை பெற கட்டணமில்லா எண் வெளியீடு

மன அழுத்த ஆலோசனை பெற கட்டணமில்லா எண் வெளியீடு


UPDATED : அக் 09, 2026 07:51 PM

ADDED : அக் 09, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 07:51 PM ADDED : அக் 09, 2026 07:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மன அழுத்தம் ஏற்படும்போது ஆலோசனைகள் பெற கட்டணமில்லா எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் அக்., 10ம் தேதி உலக மனநல கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் உலக மனநல தினமாக கடைப்பிடிக்கிறது. இந்த ஆண்டு ‘வாழ்வியல் அனுபவங்களை கேட்போம், உண்மை உரையாடல், உண்மையான மாற்றம்’ என்ற கருப்பொருளில் கடைப்பிடிக்கிறது.

மனநலம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அத்தியாவசியமாகும். உலக மனநல தினத்தில் ஒவ்வொரு மனநலப் பிரச்னைக்கு பின்னால், ஒரு தனித்துவமான அனுபவம், உணர்வு மற்றும் கதையை கொண்ட மனிதர் உள்ளார்.

இன்றைய வேகமான உலகில், குழந்தைகள், வாலிபர்கள், மாணவர்கள், குடும்பங்கள், பணிபுரிபவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் மன அழுத்தம், பதற்றம், தனிமை, உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் பிற மனநல சவால்களை சந்திக்கின்றனர்.

உதவி கேட்பது பலவீனம் அல்ல. உங்களுக்கு ஏதேனும் மன ரீதியான பிரச்னைகளால், மன அழுத்தம் ஏற்படும்போது, ஆலோசனை பெற கட்டணமில்லா எண்கள் : 14416 அல்லது 1800-891-4416 தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us