கோவில்களுக்கு அறங்காவலர் நியமிக்க ஜான்குமார் கோரிக்கை
கோவில்களுக்கு அறங்காவலர் நியமிக்க ஜான்குமார் கோரிக்கை
ADDED : ஆக 28, 2026 09:13 PM
புதுச்சேரி: சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:
முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள வேல்ராம்பட்டு ஏரியை துார் வார வேண்டும். விபத்துகளை தவிர்க்க இரவு நேரங்களில் மண் அள்ள வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழுதடைந்த சாலைகைள சீரமைக்க வேண்டும். மழைக்காலம் துவங்குவதற்கு முன் வாய்க்கால்கலை துார் வார வேண்டும். தொகுதி முழுதும் மின்மாற்றிகள் அமைத்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த அங்கன்வாடிகளை சீரமைக்க வேண்டும். வேல்ராம்பட்டில், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை உள்ள மெயின்ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.
கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். புதுச்சேரியின் வருவாயை அதிகரித்து மாநில அந்தஸ்து கேட்க வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து சுலபமாக கிடைத்து விடும். அதை கேட்டுபெற வலியுறுத்தி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் டில்லி சென்று பிரதமரை சந்திக்கலாம்’ என்றார்.
