UPDATED : நவ 05, 2026 02:11 AM
ADDED : நவ 05, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நகை கடை ஊழியரை மிரட்டிய வரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 38; புதுச்சேரி, கொசக்கடை வீதியில் உள்ள நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்றார். இதற்கு அவரது உறவினர் ராஜசேகரன் என்பவர் தான் காரணம் என கார்த்திக் கருதினார். இதனால் ராஜசேகரனிடம், கார்த்திக் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் வழக்கம்போல நகைக்கடையில் பணியில் இருந்தபோது, ராஜசேகரன் மொபைல் போனியில் கார்த்திக்கை தொடர்பு கொண்டு திட்டி, மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
