ADDED : மார் 23, 2026 08:19 PM
புதுச்சேரி: இறகு பந்து விளையாடி போது, மயங்கி விழுந்து, நகை கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுனில்குமார், 54; புதுச்சேரி நெல்லு மண்டி வீதியில் நகை கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், வழக்கம் போல், நேற்று லாஸ்பேட்டை பாரதி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று இறகு பந்து விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். மைதானத்தில் விளையாடிவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
