ADDED : ஜன 25, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஜிப்மர் இயக்குநர் பணிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்ததை கண்டித்து, ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால். இவரின் பணிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இவரது பணிக்காலத்தை சுகாதார அமைச்சகம் மேலும் ஓராண்டு நீட்டித்தது.
இந்நிலையில், இயக்குனரின் மோசமான தலைமை மற்றும் திறமையின்மையால், கடந்த 5 ஆண்டு காலத்தில், ஜிப்மரில் பணிபுரியும், ஊழியர்கள், மருத்துவ பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இயக்குனரின் பணி நீட்டிப்பு ஆணையை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என, நேற்று மாலை ஜிப்மர் வளாகத்தில் ஊழியர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.