/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகியில் ஜிப்மர் கிளை: கவர்னர் தகவல்
/
மாகியில் ஜிப்மர் கிளை: கவர்னர் தகவல்
ADDED : மே 23, 2025 07:08 AM
புதுச்சேரி : மாகியில் ஜிப்மர் கிளை மற்றும் சமுதாய கல்லுாரி விரைவில் துவங்கப்படும் என, கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அமிர்த பாரத் திட்டத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் லிப்ட், டிக்கெட் முன்பதிவு அலுவலகம், டிக்கெட் விற்பனை இயந்திரம், பயணிகள் ஓய்வறை, நவீனர கழிப்பறை, பயணிகள் காத்திருப்பு கூடம் என நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்திய ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாகி ரயில் நிலைய திறப்பு விழா வில், கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று திறந்த வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், 'ஜிப்மர் போன்ற ஒரு நிறுவனத்தை மாகியில் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சமுதாய கல்லுாரியின் கிளை மாகியில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான அறிவிப்பு, பிரதமர் மோடி புதுச்சேரி வருகையின் போது வெளியாகும்' என்றார்.
விழாவில் ரமேஷ்பரம்பத் எம்.எல்.ஏ., நாவலாசிரியர் முகுந்தன், ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ஜெயகிருஷ்ணன், மண்டல நிர்வாகி மோகன்குமார், நகராட்சி ஆணையர் சதேந்திரசிங், கிராம பஞ்சாயத்து தலைவர் ஆயிஷா உமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.