/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.2.49 கோடி இழந்த ஜிப்மர் ஊழியர்
/
போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.2.49 கோடி இழந்த ஜிப்மர் ஊழியர்
போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.2.49 கோடி இழந்த ஜிப்மர் ஊழியர்
போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.2.49 கோடி இழந்த ஜிப்மர் ஊழியர்
ADDED : நவ 22, 2025 07:32 AM
புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, ஜிப்மர் ஊழியர் ரூ. 2.49 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, ஜி.என்.பாளையம், எழில் நகரை சேர்ந்தவர் சக்தி, 26; ஜிப்மர் ஒப்பந்த ஊழியர். இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியுள்ளார்.
அப்போது, யூடிப்பில் டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம், அதிக லாபம் தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்ளும்படி விளம்பரம் வந்துள்ளது.
இதை நம்பிய சக்தி, அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குரூப்பில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனால், ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவித்து விட்டதாக நினைத்த சக்தி, மர்மநபர்கள் அனுப்பிய போலி ஆன்லைன் டிரேடிங் லிங்கில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று பல்வேறு தவணைகளாக ரூ. 2 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 357 முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு ரூ. 11 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 702 லாபம் வந்துள்ளது.
இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சக்தி அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

