தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வெளி நாட்டிற்கு வேலை ரூ.10.62 லட்சம் மோசடி

வெளி நாட்டிற்கு வேலை ரூ.10.62 லட்சம் மோசடி

வெளி நாட்டிற்கு வேலை ரூ.10.62 லட்சம் மோசடி


UPDATED : நவ 26, 2026 06:00 PM

ADDED : நவ 26, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:00 PM ADDED : நவ 26, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கேன்டீன் உரிமையாளரிடம் வெளிநாட்டிற்கு வேலை மற்றும் விசா பெற்று தறுவதாக கூறி ரூ.10.62 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதலியார்பேட்டை குமார் மகன் சுரேந்தர்,29; இவர் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் கேன்டீன் நடத்தி வந்தார். அப்போது அங்கு பணி புரிந்த பிரவின் என்பவர் பழக்கமானார். பின் பிரவின் சுரேந்தரிடம் தனது தங்கை பிரியா ஜெர்மன் நாட்டில் வேலை மற்றும் அதற்கான விசா ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

பின் அதற்கு கட்டணமாக பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சுரேந்தர் கடந்த 2024ம் ஆண்டு முதல் 2025 செப்டம்பர் வரை பல்வேறு தவணைகளில் கடன் வாங்கியும், மனைவி, தாயார் ஆகியோரின் நகைகளை அடகு வைத்தும் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 62 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி பிரவின் மற்றும் பிரியா ஆகியோர் ஜெர்மனில் வேலை மற்றும் விசா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

தொடர்ந்து சுரேந்தர் அவர்களிடம் பணத்தை கேட்டபோது தரமறுத்து மிரட்டியுள்ளனர். இது குறித்து அவர் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகாரின் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நெல்லித்தோப்பு மோகன் நகர் பிரவின், முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகர் பிரியா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us