தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கந்த சஷ்டி பிரமோற்சவம் துவங்கியது

கந்த சஷ்டி பிரமோற்சவம் துவங்கியது

கந்த சஷ்டி பிரமோற்சவம் துவங்கியது


UPDATED : நவ 10, 2026 10:32 AM

ADDED : நவ 10, 2026 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:32 AM ADDED : நவ 10, 2026 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி பிரமோற்சவ விழா நேற்று துவங்கியது.

நெட்டப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா சுவாமிக்கு கந்த சஷ்டி பிரமோற்சவ பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று துவங்கியது.

இதையொட்டி, புற்றுமண் எடுத்தல், வாஸ்து சாந்தி தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. இன்று 10ம் தேதி முதல் 17 ம் தேதி வரை தினமும் செல்வ முத்துகுமரப்பா சுவாமிக்கு காலை அபிேஷகம், ஆராதனைகளும், மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 15ம் தேதி மாலை 6.00 மணிக்கு சூரபத்ரன் சம்ஹாரமும், 16ம் தேதி இரவு 7.00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us