சென்னை செல்ல போதிய பஸ்கள் இல்லை: புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
சென்னை செல்ல போதிய பஸ்கள் இல்லை: புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
UPDATED : நவ 10, 2026 10:32 AM
ADDED : நவ 10, 2026 10:29 AM

புதுச்சேரி: சென்னைக்கு போதிய பஸ்களை இயக்காமல் வழக்கம்போல் பி. ஆர்..டி. சி. அலட்சியம் காட்டியதால், புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் சென்னையில் பணியாற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி இருந்தனர்.
தீபாவளி முடிந்து நேற்று சென்னை செல்ல புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பயணிகள் போதிய பஸ்கள் இல்லாமல் பஸ் ஸ்டாண்டிலேயே பல மணி நேரம் காத்திருந்தனர். வந்த ஒரு சில தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இடம் கிடைக்காமல், அடித்துப் பிடித்து நெரிசலில் ஏறி, நின்று கொண்டும், கீழே அமர்ந்தவாறும் பயணித்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) இ.சி.ஆர். வழித்தடத்தில் 7, பைபாஸ் பைபாஸ் வழித்தடத்தில் 2 என
மொத்தமாக 9 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த
பஸ்களும் மாலை 6 மணிக்கு புதுச்சேரி பி. ஆர். டி.சி. பணி மனைக்கு திரும்பி விட்டதாகவும், அதற்கு மேல் ஒரு பஸ் கூட பஸ் ஸ்டாண்டில் தென்படவில்லை என்று பயணிகள் கூறினர்.
இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இ.சி.ஆர்., வழித்தடத்தில் 20 பஸ்கள், பைபாஸில் 20, சேலம் 3, திருச்சி 3, திருவண்ணாமலை 2, மொத்தமாக 48 பஸ்கள் நேற்று புதுச்சேரிக்கு இயக்கப்பட்டன. இது மட்டுமின்றி சில சிறப்பு பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் புதுச்சேரிக்கு வந்து சென்றன. புதுச்சேரி அரசு சார்பில் இயக்கப்படும் பி. ஆர். டி. சி. மட்டும் எந்த ஒரு சிறப்பு பஸ்சையும் நேற்று இயக்கவில்லை. இது மட்டுமின்றி பல ஆண்டுகளாக எந்த ஒரு பண்டிகை காலங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்காமல் பி. ஆர். டி. சி. யினர் அலட்சியமாக இருந்து வருவதாக தனியார் பஸ் டிரைவர்கள் கூறினர்.
போதிய பஸ்கள் இல்லாமல் ஆயிரக் கணக்கான பயணிகள் நேற்று நள்ளிரவு வரை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த அவல நிலை நேற்று அரங்கேறியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் புதுச்சேரிக்கு நேற்று இயக்கப்படாமல் போனால், பயணிகள் நிலை என்ன ஆவது. பி. ஆர். டி. சி. பஸ்கள் இயக்கப்படாமல் போனது அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியுமா, பயணிகளின் அவதியை யார் சரி செய்வது.
