தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இரு தரப்பினரிடையே தகராறு :வி.சி.க.,வினர் மறியலால் பரபரப்பு

இரு தரப்பினரிடையே தகராறு :வி.சி.க.,வினர் மறியலால் பரபரப்பு

இரு தரப்பினரிடையே தகராறு :வி.சி.க.,வினர் மறியலால் பரபரப்பு


UPDATED : நவ 10, 2026 05:40 PM

ADDED : நவ 10, 2026 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 05:40 PM ADDED : நவ 10, 2026 10:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: ஆராய்ச்சிக்குப்பம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்திடகோரி, வி.சி.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கருமாதி கொட்டகை பகுதியில் நேற்று இரவு, சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாகவும், சோரியாங்குப்பம், பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மேல்பரிக்கல்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு மற்றொரு குழுவாகவும் தனித்தனியே மது அருந்தி உள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதையடுத்து, சோரியாங்குப்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பைக்கை, சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த இளைஞர் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சோரியாங்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள், பாகூர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

வி.சி.க.,வினர் சிலர், பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும் என வலியுருத்தினர். போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவா்த்தை நடத்தினர்.

பின் போலீஸ் தரப்பில், பிரச்னை தொடர்பாக யாரும் புகார் தரவில்லை. சமாதானம் போக விரும்புதாக தெரிகிறது. புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து, அங்கிருந்து சென்ற வி.சி.க., வினர், புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் சந்திப்பில் அமர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போ க செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மற்றொரு தரப்பினருக்கு, ஆதரவாக பா.ம.க.,வினர் பாகூர் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us