ADDED : நவ 10, 2026 03:40 PM
பட்டாசு வெடித்த 24 பேர் மீது வழக்கு
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு நிர்ணயித்த நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பட்டாசு வெடித்த ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த குணாஸ் 25, கோவிந்த சாலையைச் சேர்ந்த பிரபு 27, வேல்முருகன் 23, முத்தியால்பேட்டையை சேர்ந்த சங்கர் 19, பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சராதி 19, சோவியர் 26, திருக்கனூரை சேர்ந்த ரமேஷ் 41, மங்கலத்தை சேர்ந்த பாலாஜி 21, வடிவேல் 40, செல்வமணி 35, ஆனந்த் 22, பிரித்விராஜ் 32, என 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போல், காரைக்காலில் 6 பேர் மீதும், ஏனாமில் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாமிபிள்ளை தோட்டம் பகுதியில், லாஸ்பேட்டை சேர்ந்த அவினாஷ் 18, என்பவர் அவ்வழியாக சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டினார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
50 பேருக்கு சிகிச்சை
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பட்டாசு வெடித்து காயம், சாலை விபத்து, போதையில் சண்டை என 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
பொது இடத்தில் ரகளை :5 பேர் கைது
மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டபோது, அங்கு பொது இடத்தில் ஆபாசமாக பேசிய பண்டசோழநல்லுார் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி 21, கால்பபட்டு சந்திப்பு பகுதியில் ஆபாசமாக பேசிய மரக்காணம் பகுதியைச் சேர்ந்த விஜயன் 42, வில்லியனுார் பகுதியில் ஆபாசமாக பேசிய கொம்பாக்கம் பகுதி சேர்ந்த அசோக்குமார் 27, வேல்ராம்பட்டு பகுதி கவியரசன் 26, ஆகியோரை அந்தந்த போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
