/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராகுலை சந்தித்த கந்தசாமி புதுச்சேரி காங்., கட்சியில் பரபரப்பு
/
ராகுலை சந்தித்த கந்தசாமி புதுச்சேரி காங்., கட்சியில் பரபரப்பு
ராகுலை சந்தித்த கந்தசாமி புதுச்சேரி காங்., கட்சியில் பரபரப்பு
ராகுலை சந்தித்த கந்தசாமி புதுச்சேரி காங்., கட்சியில் பரபரப்பு
ADDED : மே 11, 2025 01:12 AM

மாஜி அமைச்சர் கந்தசாமி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சந்தித்து பேசியது புதுச்சேரி காங்., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் தேர்தலில் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி காங்., மாநில செயலாளர் சம்பத்துடன் டில்லி சென்ற கந்தசாமி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை அவரது ஜன்பத் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்பொழுது அவரிடம் புதுச்சேரியில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து ராகுல் கேட்டறிந்தார். பின்னர் வரும் சட்டசபை தேர்தலில் காங்.,வெற்றி பெறுவதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தினார். இதனால், உற்சாகத்துடன் கந்தசாமி புதுச்சேரிக்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து காங்., கட்சியினர் கூறுகையில், 'ஏம்பலம் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட கந்தசாமியின் சகோதரர் மகன் மோகன்தாஸ் முயற்சித்து வருகிறார். பல மாநிலங்களில் கட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டு தலைவர் மற்றும் மூன்று செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவ்விரு காரணங்களுக்காக கந்தசாமி, ராகுலை சந்தித்திருக்கலாம்' என்றனர்.
கந்தசாமி - ராகுல் சந்திப்பு புதுச்சேரி காங்., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.