தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரைம் செய்திகள்:காரைக்கால் பகுதி

கிரைம் செய்திகள்:காரைக்கால் பகுதி

கிரைம் செய்திகள்:காரைக்கால் பகுதி


UPDATED : அக் 10, 2026 06:11 PM

ADDED : அக் 10, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:11 PM ADDED : அக் 10, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2 வாலிபர்கள் கைது: கோட்டுச்சேரி போலீசார், திருவள்ளுவர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கோட்டுச்சேரி புதுத் தெரு வெங்கடேஷ், 27, என்பவரை கைது செய்தனர்.

அதே போல், நெடுங்காடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

நல்லாத்துார், மேலப்படுகை சாலையில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, பாலுார் பகுதியைச் சேர்ந்த சரவணன், 26, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் மாயம்: காரைக்கால் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்தவர் பாப்பாகனி. இவரது மகன் ஷேக் தாவூத். இவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த ஜெஸிமா பானு, 31, என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. மூன்று மகள்கள் உள்ளனர்.

ஷேக் தாவூத் கடந்த 2025ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார். ஜெஸிமா பானு அவ்வப்போது வீட்டு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 8ம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு துாங்கச் சென்ற ஜெஸிமா பானுவை, காணவில்லை. புகாரின்பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து ஜெஸிமா பானுவைத் தேடி வருகின்றனர்.

வாலிபர் கைது: திருப்பட்டினம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வநாதன் நேற்று முன்தினம் ரோந்து சென்றர். போலகம் கடை வீதியில் ஆபாசாமாக பேசிய அதேப் பகுதியை சேர்ந்த அபிரவன், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us