UPDATED : அக் 31, 2026 07:47 PM
ADDED : அக் 31, 2026 07:44 PM
பைக் மோதி மூதாட்டி காயம்: காரைக்கால், கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 28ம் தேதி திருச்சி, சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த முத்து சிதம்பரம், 24, என்பவர், ஹோண்டா பைக்கை ஒட்டிவந்தார்.
அப்போது அவ்வழியாக நடந்து சென்ற கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி, 68, மீது பைக் மோதியது. படுகாயமடைந்த அவர், அரசு மருந்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 பேர் கைது: விழிதியூர் சாலை சந்திப்பில் கடந்த 29ம் தேதி முன்விரோதம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார், 52, என்பவரை அதேப்பகுதியை சேர்ந்த பாலமுருகன், 26, ராஜசேகர், 24, முத்தழகன், 31, ஆகியோர் திட்டி மிரட்டியுள்ளனர்.
சிவக்குமார் புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகன், ராஜசேகர் ஆகியோரை கைது செய்தனர். முத்தழகனை தேடி வருகின்றனர்.
வாலிபர் மாயம்: திருப்பட்டினம், போலகம், புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 34; கூலி தொழிலாளி. இவர், கடந்த 30ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரர் கதிரவன் புகாரின் பேரில் திருப்பட்டினம் சப்இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 பேர் கைது: நெடுங்காடு போலீசார், வஞ்சியாறு ஆற்றங்கரை சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். பொது இடத்தில் குடிபோதையில் ஆபாசாமாக பேசிய நெடுங்காடு, அகரமாங்குடி தவகிருஷ்ணன், 26, முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
