/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று கரக திருவிழா
/
திரவுபதி அம்மன் கோவிலில் இன்று கரக திருவிழா
ADDED : மே 13, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கிளிஞ்சிக்குப்பம், திரவுபதி அம்மன் கோவிலில், இன்று கரக திருவிழா நடக்கிறது.
உறுவையாறு அடுத்த கிளிஞ்சிகுப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், சித்திரை மாத விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. இவ்விழாவையொட்டி, இன்று கரக திருவிழா நடக்கிறது. அதனை தொடர்ந்து, நாளை மதியம் 2:00 மணிக்கு, பகாசூரனுக்கு அன்னமளிக்கும் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, 15ம் தேதி சாமி வீதியுலா, 16ம் தேதி, மாலை 6:00 மணியளவில் தீமிதி விழா நடக்கிறது. 17ம் தேதி தர்மருக்கு பட்டாபிேஷக நிகழ்ச்சியும், அன்றிரவு 8:00 மணியளவில், ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.