/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே போட்டி பரிசளிப்பு விழா
/
கராத்தே போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜன 31, 2026 05:47 AM

புதுச்சேரி: கோர்க்காடு வெங்கட்ட ரங்க ரெட்டியார் நினைவாக 46வது இன்விடேஷனல் கராத்தே போட்டி பரிசளிப்பு விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.
விழாவில், கராத்தே பள்ளி சேர்மன் ராமச்சந்திரன் வரவேற்றார். டாக்டர் நல்லாம் தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் சபாபதி, சர்வதேச நடுவர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்ன்ட் பேட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் பெலிக்ஸ் ஆனந்ததாஸ், கோஜூகாய் கராத்தே பள்ளி தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் மதன்குமார், சட்ட ஆலோசகர் தன்ராஜ், ஜீவா திரையரங்க உரிமையாளர் சீனுவாசன், மூத்த கராத்தே பயிற்சியாளர் சுகுமாரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், கராத்தே சங்க செயலாளர் சுந்தராஜன், அழகப்பன், மதிஒளி, கண்ணன், குமரன், கெஜலட்சுமி, ஜவஹர், முத்துகுமார், கோபாலகிருஷ்ணன், லலிதா, சுனித்தா, கார்குழலி, பிரனவ், நவனிஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சித்ரா ஜோதிமணி செய்திருந்தார். ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

