பாகூர் மூலநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
பாகூர் மூலநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா
ADDED : நவ 24, 2026 11:38 PM

பாகூர்: பாகூர் ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மகா தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில் இன்று (நவ.,24) கார்த்திகை தீப உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, இரவு 7:00 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது மகா தீபம் ஏற்றி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 7:30 மணிக்கு கோவிலின் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில், ஜோதி சொரூபமாக எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சந்திரசேகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி உள் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
