/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.5 கோடி மோசடி வழக்கில் கேரளா ஆசாமி கைது; புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
/
ரூ.5 கோடி மோசடி வழக்கில் கேரளா ஆசாமி கைது; புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
ரூ.5 கோடி மோசடி வழக்கில் கேரளா ஆசாமி கைது; புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
ரூ.5 கோடி மோசடி வழக்கில் கேரளா ஆசாமி கைது; புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
ADDED : மே 13, 2025 05:52 AM

புதுச்சேரி : தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பணம் சென்ற , வங்கி கணக்கு உரிமையாளரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் வாட்ஸ் ஆப்பில், அந்த நிறுவனத்தின் கணக்காளரை தொடர்பு கொண்டு, தான் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்காக அவர் கூறும் வங்கி கணக்கில் பணத்தையும் அனுப்புமாறு கூறினார். அதனை நம்பி, கணக்காளர் ரூ.5.10 கோடியை அனுப்பினார்.
அதன்பிறகே தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து, கணக்காளர் அளித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், சைபர் குற்றவாளி மோசடி மூலம் பெற்ற ரூ.5.10 கோடியில், ரூ.3 கோடி மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வங்கி கணக்கின் உரிமையாளரான மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் மாவட்டம், ஜலாங்கியைச் சேர்ந்த மொபிகுல் ஆலம் முலாவை கடந்த மாதம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.1.80 கோடி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றது என தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி, பாஸ்கரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் ஏட்டு மணிமொழி மற்றும் போலீசார் பாலாஜி, வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், கேரளாவிற்கு சென்று, சரத்தை கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்து அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.