/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரைவருக்கு கத்தி வெட்டு 3 பேருக்கு போலீஸ் வலை
/
டிரைவருக்கு கத்தி வெட்டு 3 பேருக்கு போலீஸ் வலை
ADDED : அக் 27, 2024 03:45 AM
புதுச்சேரி : தீபாவளி சீட்டு பணத்தினை கேட்ட டிரைவரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு முதல் தெருவைச் சேர்ந்தவர் பிரவின், 34; கார் டிரைவர். இவர், பூமியான்பேட்டை ஜவகர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் தீபாவளி சீட்டு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கட்டினார். தீபாவளி நெருங்குவதால் பிரவின் நேற்று முன்தினம் மாலை சங்கர் வீட்டிற்கு சென்று சீட்டு பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரவு 10.00 மணிக்கு பிரவின் வீட்டிற்கு சென்ற சங்கர், அவரது மைத்துனர் தினேஷ், நண்பர் செழியன் ஆகியோர் பிரவினை கத்தியால் சரமாரியாக வெட்டினர். பிரவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்தனர். இதனை பார்த்த மூவரும் தப்பிச் சென்றனர். படு காயமடைந்த பிரவின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரவின் புகாரின் பேரில் சங்கர் உட்பட மூவர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.