ADDED : பிப் 19, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் குரு போற்றி கோடி அர்ச்சனை வழிபாடு நடந்தது.
உலக நன்மைக்காக ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள ஆயிரங்கனக்கான ஆன்மிக இயக்கம் மூலம் உலக சாதனை முயற்சியாக குரு போற்றி கோடி அர்ச்சனை வழிபாடு நேற்று கோட்டுச்சேரி ஸ்ரீசிதளா தேவி மாரியம்மன் கோவில் வெட்ட வெளியில் பஞ்ச பூத வழிபாட்டோடு நடந்தது.
இதில் வட்டத்தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ,மாதவன்,அல்லிராணி,மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

