/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது; மண் மூட்டைகள் தயார்
/
கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது; மண் மூட்டைகள் தயார்
கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது; மண் மூட்டைகள் தயார்
கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது; மண் மூட்டைகள் தயார்
ADDED : அக் 21, 2024 06:07 AM

பாகூர்: கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால், கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாறு படுகை அணை நிரம்பி வழிகிறது.
பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதுச்சேரி - தமிழக பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு, தரைப்பாலத்துடன் கூடிய படுகை அணை கட்டப்பட்டது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி, தரைப்பாலத்தின் மீது தண்ணீர் வழிந்து செல்கிறது.
ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தால், கரை பகுதியில் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மண் மூட்டைகள் மூலமாக கரைகளை பலப்படுத்த திட்டமிட்டு, முதற்கட்டமாக 3 ஆயிரம் மண் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, படுகை அணை தண்ணீரில் ஆபத்தை உணராமல், வாலிபர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.