கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம்: இந்திய கம்யூ., வலியுருத்தல்
கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம்: இந்திய கம்யூ., வலியுருத்தல்
UPDATED : செப் 07, 2026 11:03 PM
ADDED : செப் 07, 2026 10:55 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என இந்திய கம்யூ., வலியுருத்தி உள்ளது.
இந்திய கம்யூ., கிருமாம்பாக்கம் கிளைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கிளைச் செயலாளர் லெனின் நடைபெற்ற வேலை அறிக்கையை வாசித்தார். வேலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தில் முன்னடியான், மதுபாலன், சுமதி, பிருந்தாவதி, பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏம்பலம் தொகுதி துணைச் செயலாளர் பக்தவச்சலம், கிளையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். ஏம்பலம் தொகுதி செயலாளர் பெருமாள், 'புதுச்சேரி மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள், அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், கிருமாம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு படிகள் அமைத்த தர வேண்டும். கிடப்பில் உள்ள நவீன திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சுடுகாட்டு சாலையில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கங்காபவானி அம்மன் கோவில் குளத்தைச் சுற்றி முள்வேலி அமைத்து விபத்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். கிடப்பில் உள்ள கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
