தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கதண்டுகள் கொட்டி பெண் பலி

கதண்டுகள் கொட்டி பெண் பலி

கதண்டுகள் கொட்டி பெண் பலி


ADDED : செப் 07, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பனை ஓலை வெட்டச் சென்ற பெண்ணை கதண்டுகள் கொட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காரைக்கால் கோட்டுச்சேரி கீழக்காசாக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகையன் மனைவி அமுதா ,35;பனை ஓலைகள் மூலம் செய்யும் பொருட்கள் தயாரிக்கும் பணி செய்துவந்தார்.

நேற்று முன்தினம் முருகையனும், அவரது மனைவி அமுதாவும் பைக்கில் கோட்டுச்சேரியில் இருந்து திருவேட்டக்குடி செல்லும் வாணிய தெரு சாலையோரம் பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கூடு கட்டியிருந்த கதண்டுகள் அமுதாவின் தலை,முகம் மற்றும் உடல் பகுதிகளில் கொட்டியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட அமுதாவை அவரது கணவர் கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து அமுதாவை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது வழியில் அவர் இறந்தார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us