/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரிய பாளையத்தம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
பெரிய பாளையத்தம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 08, 2025 10:28 PM

புதுச்சேரி : அண்ணா சாலை, பெரியபாளையத்தம்மன் கோவிலில், மகா கும்பாபிேஷகம் நடந்தது.
புதுச்சேரி, அண்ணா சாலை, ராஜா தியேட்டர் அருகே பெரிய பாளையத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மற்றும் ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை வேதபாராயணம், 4ம் கால பூஜை, நாடி சந்தனம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதில், நேரு எம்.எல்.ஏ., தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.