sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்

/

 கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்

 கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்

 கூத்தாண்டவர் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : மார் 09, 2026 04:06 AM

Google News

ADDED : மார் 09, 2026 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமான கூத்தாண்டவர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் இருந்த இடத்திலேயே புதியதாக கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷகம் நேற்று காலை நடந்தது.

கும்பாபிேஷக விழா கடந்த 6ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம் நடந்தது. மாலை வாஸ்து ஹோமம், ரக்ஷா பந்தனம், இரவு கும்ப அலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜை மற்றும் தீப ஆராதனை நடந்தது.

கடந்த 7ம் தேதி காலை இரண்டாம் கால யாகசால பூஜையும், பகல் 12:30 மணியளவில் பூர்ணாஹீதி தீபாராதனையும், மாலை 5:30 மணியளவில் மூன்றாம் கால யாகசால பூஜையும் தீபாரானை நடந்தது.

நேற்று காலை 7:00 மணியளவில் நான்காம் காலை யாகசாலா பூஜையும், காலை 10 மணிக்கு மேல் சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us