நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டு தரையில் வழுக்கி விழுந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் 51, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டு வராண்டாவில் வழுக்கி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
இவரை உறவினர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

