ADDED : ஏப் 10, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, பெத்துசெட்டிபேட், சுப்ரமணிய கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 53; கூலி தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர்.
மகன் படிப்பிற்காக லட்சுமி சென்னையில் தங்கியுள்ளார். புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த பழனிசாமி, கடந்த 6ம் தேதி அதிக மதுபோதையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பழனிசாமி இறந்தார். லட்சுமி அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
