/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரி மதகு சீரமைப்பு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ஏரி மதகு சீரமைப்பு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஏரி மதகு சீரமைப்பு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ஏரி மதகு சீரமைப்பு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 21, 2025 11:41 PM

பாகூர்: மணப்பட்டு தாங்கள் ஏரியின், மதகை ரூ.1.22 கோடி செலவில் சீரமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் - கன்னியக்கோவில் சாலையில், மணப்பட்டு தாங்கல் ஏரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரியின் உபரி நீர் வெளியேறும் மதகு உடைந்துள்ளதால், ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் வீணாகி வந்தது.
அதனால், மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையேற்று பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில் ரூ.1.22 கோடி செலவில், தாங்கள் ஏரி மதகை சீரமைக்கப்பட உள்ளது.
இப்பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் ஜெயரமணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.