/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு
/
அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு
அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு
அரசின் திட்டங்கள் குறித்த சேவை வாகனம் துவக்கி வைப்பு
ADDED : டிச 31, 2024 05:54 AM
புதுச்சேரி: டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தின் கீழ் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய பல்நோக்கு வாகனம் துவக்க விழா நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தின் நடந்த விழாவில், பல்நோக்கு வாகனத்தை கலெக்டர் குலோத்துங்கன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் மின் சேவைகள், அரசு நலத்திட்ட தகவல்கள், வங்கி சேவைகள், நுகர்வோர் பாதுகாப்பு சேவைகளை கிராம மக்கள் நேரடியாக பெறலாம்.
மேலும், இந்த வாகனத்தில் ஜி.பி.எஸ்.அமைப்பு, மின் மயமாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளதால், தொலைதுார சேவைகளையும் மக்கள் எளிதாக பெற முடியும்.
ஆகையால், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.