/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
/
துாக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
ADDED : மார் 02, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை, உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் சம்பத், 62; டைல்ஸ் போடும் கூலித் தொழிலாளி.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களாக அவர் மன உலைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் அவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டு வாசலில் இருந்த மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

