/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 31, 2026 05:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி நலவழித்துறை தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக தொழுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் செல்வநாயகி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பத்மினி ஆகியோர் தலைமை தாங்கினர். டாக்டர் கீர்த்திவாசன், சுகாதார உதவியாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் யுவராஜ் தொழுநோய் அறிகுறிகள், சிகிச்சை முறை குறித்து பேசினார். சுகாதார உதவியாளர் பன்னீர்செல்வம் தொழுநோய் பரவாமல் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
சுகாதார உதவியாளர் கார்த்திகேயன் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, ஆசிரியர்கள், மாணவியர் ஏற்றுக் கொண்டனர். சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

