ADDED : ஜூலை 08, 2026 02:06 AM

புதுச்சேரி: ஜிப்மர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
ஜிப்மர் அவரச மருத்துவம் மற்றும் விபத்து மருத்துவத் துறை, விபத்து மருத்துவத் துறை சார்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திட்டம் சார்பில், மிஷன் ஜீவன்-யுவா சேப்டி கார்ப்ஸ் என்ற இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
இதன்துவக்க நிகழ்ச்சி மூலகுளம் தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் செவ்வேள் தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர், ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைகழக பொறுப்பு இயக்குனர் அர்ஷ்ஜி, அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் கவிதா வாசுதேவன், ஜிப்மர் இணை பேராசிரியர் மனு அய்யன், உதவி பேராசிரியர் சுரேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ அவசர நிலைகள், திடீர் மாரடைப்பு, சாலை விபத்துகள், அதிகர ரத்த போக்கு, மூச்சுத் திணறல், போன்ற பல்வேறு உயிர்காக்கும் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது.
