ஆன்லைனில் எம்.பி.ஏ., படிப்பு என கூறி பெண்ணிடம் மோசடி
ஆன்லைனில் எம்.பி.ஏ., படிப்பு என கூறி பெண்ணிடம் மோசடி
ADDED : ஜூலை 08, 2026 02:05 AM
புதுச்சேரி: காலாப்பட்டைச் சேர்ந்த பெண், ஆன்லைனில் எம்.பி.ஏ., படிப்பு தொடர்பான விளம்பரத்தை பேஸ்புக்கில் பார்த்துள்ளார்.
இதையடுத்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர், எம்.பி.ஏ., படிப்பிற்கு பதிவுக்கட்டணம் மற்றும் முதல் பருவத்திற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அதைநம்பிய அப்பெண் மர்மநபருக்கு பல்வேறு தவணைகளாக ரூ.57 ஆயிரம் செலுத்தினார். ஆனால், அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
லாஸ்பேட்டையை சேர்ந்தவருக்கு, வங்கி அதிகாரி என்ற பெயரில் வாட்ஸ் அப் மூலம் மொபைல் அழைப்பு வந்துள்ளது. அதனை அவர் எடுத்து பேசியபோது, திடீரென அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதேபோல், பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் 66 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 87 ஆயிரம் என, மொத்தம் 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
