மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு என்.ஆர் இலக்கிய பேரவை கண்டனம்
மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு என்.ஆர் இலக்கிய பேரவை கண்டனம்
ADDED : அக் 17, 2026 06:32 PM
புதுச்சேரி: மாஜி முதல்வர் நாராயணசாமிக்கு என்.ஆர். இலக்கிய பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி என்.ஆர் இலக்கியப் பேரவை தனசேகரன் அறிக்கை:
என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சி திறந்த புத்தகமாய் உள்ளது. நாள்தோறும் மக்களுக்கான திட்டங்களை தேடிப் பார்த்து நிறைவேற்றி வருகிறது. 3,333 மாநில பயனாளிகளுக்கு வீடுகளில் சூரிய மின் சக்திக்கு மத்திய அரசோடு இணைந்து ரூ. 10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அமைதி பூங்காவான புதுச்சேரியில் விலைவாசி உயர்வு, கொள்ளை என்று கூறி வரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு, அவருடைய கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நிலவரம் தெரியும்.
புதுச்சேரி காங்கிரசை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்த நாராயணசாமி நாள்தோறும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசினை குறை சொல்லுவதை கண்டிக்கின்றோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
