
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் முருங்கப்பாக்கத்தில் கால்நடை, கோழிகள் கண்காட்சி நடந்தது.
கால்நடை துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் காந்திமதி முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் பல வகையான கோழிகள் இடப்பெற்றன. சிறப்பு விருந்தினரான பாஸ்கர் எம்.எல்.ஏ., சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்து, பராமரித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முருங்கப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர்கள் வெங்கடேசன், பழனிசாமி, உதவியாளர்கள் அன்புகரசன், வேல்முருகன், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவர் குமரன் நன்றி கூறினார்.

