/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம ஆசனங்கள் (இரண்டாம் பாகம்)
/
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம ஆசனங்கள் (இரண்டாம் பாகம்)
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம ஆசனங்கள் (இரண்டாம் பாகம்)
உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம ஆசனங்கள் (இரண்டாம் பாகம்)
ADDED : அக் 09, 2025 02:02 AM

உடலில் சக்தியை பெருக்கி, சமநிலை அடையும் 'லோம விலோம' பயிற்சியின் முதல் நிலையை கடந்த வாரம் பார்த்தோம். இனி, இரண்டாம் பாக ஆசனங்களின் செயல்முறையை பார்ப்போம்...
ஸ்தம்பன் ஆசனம் ஷவாசனத்தில் இருந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே வலது காலையும், உடலையும் ஒரே நேரத்தில் துாக்கவும். கையால் காலைப் பிடித்து தலையை முட்டியைத் தொடும்படி இழுக்கவும். காலை துாண் போல் வான் நோக்கி வைக்க வேண்டும். பின்னர் மூச்சை வெளியிட்டபடி காலை இறக்கி பின் மெதுவாக உடலை தரைக்கு இறக்கி, ஷவாசனத்திற்கு திரும்பவும். மீண்டும் இரு முறை செய்த பின், இதேபோன்று இடது காலை வைத்து செய்ய வேண்டும்.
அர்த்த துனராசனம் ஷவாசனத்தில் இருந்து உன்முகாசனத்திற்கு திரும்பவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, வலது கணுக்காலை பிடிக்கவும். காலையும், உடலையும் முடிந்த அளவு தரையில் இருந்து துாக்கவும். பக்கவாட்டிற்கு திரும்பக்கூடாது. வயிற்றுப்பகுதி தரையில் இருக்க வேண்டும். முதுகை வளைத்து வில் வடிவில் வைக்கவும். பின், மூச்சை வெளியிட்டபடி உடலை உன்முகாசனத்திற்கு திரும்பவும். மேலும், இருமுறை செய்து, பின் இடதுபக்க காலை பிடித்து இதேபோன்று மூன்று முறை செய்யவும்.
ஏகபாத உடாணபாத த்ருட ஆசனம் த்ருடாசனத்தில் இடப்பக்கம் கீழேயும், வலப்பக்கம் மேலேயும் இருக்கும்படி நிலை கொள்ளவும். இடது கையை முட்டி அளவு மடித்து, தலையை கையில் வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து வலது காலை மடித்து, கால் பாதத்தின் உள்பக்கம் வலது கையால் பிடித்து நேரே நீட்டவும்.
முடிந்தளவு இடுப்புப் பகுதியை நிமிர்த்தி நீட்டவும். பக்கவாட்டிலேயே இருக்க வேண்டும்.
பின், மூச்சை வெளியே விட்டு காலை மடித்து த்ருட ஆசவனத்திற்கு திரும்பவும்.
மேலும் இருமுறை செய்யவும்.
பின், உடலை நிமிர்த்தி நீட்டவும். பக்கவாட்டிலேயே இருக்க வேண்டும். வலது பக்கம் திரும்பி, இடப்பக்கம் மேல் நோக்கிய நிலைக்கு வரவும்.
இப்பக்கத்தில் மூன்று முறை உள்மூச்சில் காலைத் தாக்கி வெளி மூச்சில் கீழே இறக்கவும்.
பின் ஷவாசனத்தில் ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். இவையே லோம-விலோம வரிசையின் இரண்டாம் பாக ஆசனங்களாகும்.
லோம-விலோம ஆசனங்களின் மூன்றாம் பாக செய்முறைகளை அடுத்த வாரம் பார்ப்போம்...