/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு ஒலிம்பிக் பளு துாக்கும் போட்டி புதுச்சேரி வீரருக்கு தங்கப் பதக்கம்

ADDED : அக் 09, 2025 02:02 AM

புதுச்சேரி: தேசிய அளவில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் வலு துாக்குதல் போட்டியில், புதுச்சேரி வீரர் தங்கப் பதக்கம் பெற்றார்.
தேசிய அளவில் சிறப்பு ஒலிம்பிக் பலு துாக்குதல் போட்டி, டில்லியில் கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில், 21 மாநிலங்களில் இருந்து 130 வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், புதுச்சேரி சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இயக்குனர் சித்ரா ஷா, பயிற்சியாளர் பாக்யராஜ் தலைமையில் பங்கேற்ற வீரர் சற்குணவர்மன், 66 கிலோ எடை பிரிவில், ஸ்குவாட் 165 கிலோ, டெட் லிப்டிங் 200 கிலோ,பெஞ்ச் பிரஸ் 95 கிலோ என, மொத்தம் 460 கிலோ எடையை துாக்கி சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.
பதக்கம் வென்ற வீரர் சற்குணவர்மனை, புதுச்சேரி ஒலிம்பிக் விளையாட்டு போட்டி சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.